நூறு நாள் ஓட்டக்காரர்களுக்கு என்னுடைய முதல் வணக்கம்.

கடந்த ஆண்டு ஜனவரி 2019 லில் தான் என்னுடைய முதல் ஓட்டம் 5கிலோமீட்டர் திருப்பூர் மாரத்தான் போட்டியில் தான் தொடங்கினேன், அதன் பிறகு 3 மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டேன். பிறகு உங்கள் 100 நாட்கள் தொடர் ஓட்டம் பற்றி கேள்வி பட்டேன் திரு துரையரசு அண்ணனிடம் இருந்து, பிறகு அவர் ஆலோசனை படி ஓட்டத்தை தொடர்ச்சியாக செய்து வந்தேன். அடுத்து அடுத்த மாரத்தான் போட்டியில் ஓட்ட தொலைவுகள் அதிகமாக எடுத்துக்கொண்டேன், 5 கிலோமீட்டரில் ஆரம்பித்து இப்பொழுது 25 கிலோமீட்டர் வரை ஓட முடியும் என்ற நிலையை அடைய காரணமாய் அமைத்து கொடுத்த 100 நாள் ஓட்ட போட்டிக்கு என்னுடைய நன்றி.

My first salute to all 100 Days runners.

I did my first 5 km Tirupur Marathon in January 2019 and then followed by another 3 more running events. Then I heard about your ‘100 Days of Running’ from Mr. Durairaj’s brother and I registered myself for the same.

My sincere thanks to the team of ‘100 Days of Running’ for providing an opportunity to advance my running from 5 km to 25 km.